துப்பாக்கி படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் - விஜய் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் கத்தி. இசை வெளியீடு, டீசர் வெளியீடு என கடந்த சில வாரங்களாக
இந்தப் படத்தைப் பற்றிய செய்தி பரபரப்பாகி உள்ளது. ஐ படம் தீபாவளிக்கு வர வாய்ப்பில்லை என்று தெரிந்தவுடன் பலரின் பார்வை தற்போது கத்தி படத்தின் மீது திரும்பியுள்ளது. துப்பாக்கி படத்தை விட பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று முருகதாஸும்,
விஜய்யும் கடுமையாக உழைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். விஜய் படத்தில் இரு வேடங்களில் நடிப்பதால் அவருடைய ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். கத்தி படத்திற்குப் போட்டியாக வேறு எந்தப் படத்தையும் அவரது ரசிகர்கள் கருதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.படத்தின் டப்பிங் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படத்தின் வியாபாரமும் எதிர்பார்த்ததை விட அதிகமான வரவேற்புடன் நடந்து வருகிறதாம். கேரளாவில்
ஒரு தமிழ்ப் படம் இவ்வளவு திரையரங்குகளில் வெளியாவது மலையாளத் திரையுலகில் உள்ளவர்களுக்கும் ஒரு கலக்கத்தை
ஏற்படுத்தியிருக்கிறதாம். நல்லவேளை ஐ படம் தீபாவளிக்கு வரவில்லை. வந்திருந்தால் கேரளாவில் ஒரு மலையாளப் படத்தைக் கூட பார்த்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.

0 comments:
Post a Comment