வேலையில்லா பட்டதாரி படத்திற்குப் பிறகு தனுஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் அனேகன்.
கே.வி.ஆனந்த் இந்தப் படத்தை இயக்குகிறார். ‘அயன்’, ‘கோ’, ‘மாற்றான்’ படங்களை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கும் படம் இது. ஏ.ஜி.எஸ் எண்டர்டேயின்மெண்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. கே.வி.ஆனந்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்தான் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார்.
தனுஷ் நடிக்கும் படத்துக்கு ஹாரிஸ் இசையமைப்பது இதுவே முதல் முறை. படத்தில் கார்த்திக், முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தனுஷுக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த அமிரா, தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் அதுல் குல்கர்னி, ஆசிஷ் வித்யார்த்தி, ஜெகன் ஆகியோர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
படம் குறித்து இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறும்போது, அனேகன் ஒரு காதல் சார்ந்த படம். இந்தப் படத்துல ஒரு அருமையான காதல் இருக்கும். வெவ்வேறு காலக்கட்டங்களில் கதை நகர்வதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. நாயகன் தனுஷுக்கும், அமிராவுக்கும் படத்தில் மூன்று விதமான கெட்டப்புகள். திருவாசகத்தில் இருந்துதான் படத்தின் தலைப்பை தேர்வு செய்தேன். அனேகன் என்றால்? ஒன்றானவன், உருவில் பலரானவன் என்று பொருள். என்றார்.

0 comments:
Post a Comment