கமல்-கௌதமி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘பாபநாசம்’. மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடித்து வெற்றிநடை போட்ட ‘திரிஷ்யம்’ படத்தின் ரீமேக் தான் ‘பாபநாசம்’. இப்படத்தை மலையாள இயக்குனர் ஜீது ஜோசப் இயக்கியிருந்தார். தமிழ் ரீமேக்கையும் அவரே இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி அருகில் நடைபெற்று வருகிறது. இதில் கமல், கௌதமி, சார்லி, கலாபவன் மணி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கமலுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்துவரும் கௌதமி, இப்படத்தில் அவருடன் இணைந்து நடித்தது குறித்து பகிர்ந்துகொண்டார்.
அப்போது அவர் கூறும்போது, கமல் ஒரு நடிகர் மட்டுமல்ல, சினிமாவில் எல்லா துறைகளிலும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்யக்கூடியவர். அவர் ஒரு சிறந்த குழு தலைவர். நடிப்பாகட்டும், இயக்குவதாகட்டும், எந்த துறையிலும் அவர் ஒரே மாதிரியான ஈடுபாட்டுடன் செயல்படக்கூடியவர். அவருடன் இணைந்து நடித்தது எனது திறமையை வெளிப்படுத்துவதற்கு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது என்று கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, நான் இதுவரை திரிஷ்யம் படத்தை பார்த்ததே இல்லை. அதனால் தான், இந்த படத்தில் என்னால் புதுவிதமான நடிப்பை தர முடிகிறது.. ரீமேக் படத்தில் நடிப்பது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது. இப்படத்தோடு நடிப்பதை விட்டுவிடாமல் தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:
Post a Comment