அரண்மனை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் படம் ஆம்பள.
இதில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். ஹன்சிகா மோத்வானி ஹீரோயினாக நடிக்கிறார். அவர் தவிர மாதவி லதா, மதூரிமா இரண்டு ஹீரோயின்களும் நடிக்கிறார்கள். விஷாலின் அத்தைகளாக ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா நடிக்கிறார்கள். தனது 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' நிறுவனம் மூலம் விஷாலே 'ஆம்பள' படத்தையும் தயாரிக்கிறார்.
ஏற்கெனவே இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் ஓரிரு நாட்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குளுகுளு ஊட்டியில் துவங்கியிருக்கிறது. முன்பு உள்ளத்தை அள்ளித்தா படத்தையும் இதே ஊட்டி லொகேஷன்களில் வைத்துதான் எடுத்தார் சுந்தர்.சி.
இந்நிலையில் சுந்தர்.சியுடன் அவருடைய மனைவி குஷ்புவும் ஊட்டிக்கு சென்றிருக்கிறார். இதனால் அவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இன்னொரு புறம் விஷாலின் பூஜை படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது.

0 comments:
Post a Comment