ஐ படத்தின் தெலுங்கு, இந்தி டப்பிங்கில் பிசியாக இருக்கும் விக்ரம்

Leave a Comment
விக்ரம்-எமிஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள ‘ஐ’ படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கலந்து கொண்டு சிறப்பித்தார்.இப்படத்தை தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளியிடவிருக்கிறார்கள். இதற்காக தெலுங்கு,
மற்றும் இந்தியில் டப்பிங் பேசும் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விக்ரம் தெலுங்கு பதிப்பிற்கான டப்பிங்கை பேசி முடித்து விட்டார். இந்தி பதிப்பின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன.இப்படத்தில் விக்ரம்-எமிஜாக்சனுடன் சந்தானம், உபென் பட்டேல், ராம்குமார், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தி பதிப்பின் ஆடியோவை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.தீபாவளிக்கு படம் வெளியாகும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், தற்போது தெலுங்கு, இந்தி பதிப்புகளின் டப்பிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் திட்டமிட்டப்படி தீபாவளிக்கு வெளியிட முடியாது என தெரிகிறது. எனவே, நவம்பர் 14-ந் தேதி படத்தை வெளியிடுவார்கள் என தெரிகிறது.
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

Like Us On Facebook